துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 24 Nov 2018 9:00 PM GMT (Updated: 24 Nov 2018 8:00 PM GMT)

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

* பாகிஸ்தான்–நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அசார் அலி 81 ரன்னில் ‘ரன்–அவுட்’ ஆனார். ஹாரிஸ் சோகைல் 81 ரன்னுடனும், பாபர் அசாம் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2–வது நாள் ஆட்டம் நடக்கிறது.

* உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் ‘வால்ட்’ பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் நேற்று நடந்த ‘பேலன்ஸ் பீம்’ பந்தயத்தில் 23–வது இடமே பிடித்தார்.

* சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21–13, 17–21, 21–8 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியா வீரர் சிகோ அவ்ராவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 12–21, 21–7, 21–6 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ருசெலி ஹர்தவானை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.


Next Story