தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக பெண்கள் அணி வெற்றி


தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக பெண்கள் அணி வெற்றி
x
தினத்தந்தி 4 Jan 2019 8:45 PM GMT (Updated: 4 Jan 2019 7:58 PM GMT)

67–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.

சென்னை,

67–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் 3–வது நாளான நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் கேரளா அணி 25–14, 28–26, 25–23 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் தமிழக அணி 20–25, 25–17, 21–25, 25–27 என்ற செட் கணக்கில் கர்நாடகா அணியிடம் தோல்வி கண்டது.

பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் கேரளா அணி 25–12, 24–26, 25–10, 25–16 என்ற செட் கணக்கில் கர்நாடகாவை சாய்த்தது. இன்னொரு லீக் ஆட்டத்தில் மராட்டிய அணி 25–19, 22–25, 28–26, 25–23 என்ற செட் கணக்கில் தெலுங்கானாவை வீழ்த்தியது. மற்றொரு லீக் ஆட்டத்தில் தமிழக அணி 25–12, 25–16, 25–8 என்ற நேர்செட்டில் அரியானாவை சாய்த்து முதல் வெற்றியை ருசித்தது.


Next Story