ஆசிய பேட்மிண்டனில் இந்தியாவின் சோகம் தொடருகிறது சாய்னா, சிந்து, சமீர் தோல்வி


ஆசிய பேட்மிண்டனில் இந்தியாவின் சோகம் தொடருகிறது சாய்னா, சிந்து, சமீர் தோல்வி
x
தினத்தந்தி 26 April 2019 8:18 PM GMT (Updated: 26 April 2019 8:18 PM GMT)

39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

யுஹான்,

39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதியில் 6-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து 19-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் காய் யானிடம் வெறும் 31 நிமிடங்களில் பணிந்தார். மற்றொரு கால்இறுதியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நோவால் 13-21, 23-21, 16-21 என்ற செட் கணக்கில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை அகானே யமாகுச்சியிடம் (ஜப்பான்) போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் 69 நிமிடங்கள் நீடித்தது. ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா 10-21, 12-21 என்ற நேர் செட்டில் ஷி யுகியிடம் (சீனா) தோற்று வெளியேறினார். இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஆசிய பேட்மிண்டனில் 1965-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியர்கள் யாரும் மகுடம் சூடியதில்லை. அந்த சோகம் இந்த முறையும் தொடருகிறது.

Next Story