2022–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கம்


2022–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கம்
x
தினத்தந்தி 20 Jun 2019 9:30 PM GMT (Updated: 20 Jun 2019 9:30 PM GMT)

2022–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி பர்மிங்காமில் (இங்கிலாந்து) நடக்கிறது.

பர்மிங்காம், 

2022–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி பர்மிங்காமில் (இங்கிலாந்து) நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாகும். கடந்த காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா 7 தங்கம் உள்பட 16 பதக்கங்களை அள்ளியது நினைவு கூரத்தக்கது. அதே சமயம் பெண்கள் கிரிக்கெட், பீச் வாலிவால், பாரா டேபிள் டென்னிஸ் ஆகிய பந்தயங்கள் இந்த போட்டியில் இடம் பெறுகிறது. காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் நிர்வாக கமிட்டி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.


Next Story