2021-க்குள் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் ஒலிம்பிக் போட்டி ரத்து?


2021-க்குள் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் ஒலிம்பிக் போட்டி ரத்து?
x
தினத்தந்தி 28 April 2020 12:34 PM GMT (Updated: 28 April 2020 12:34 PM GMT)

2021-க்குள் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ,

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருப்பதுடன், சர்வதேச விளையாட்டு போட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் இருக்கின்றன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு (2021) கோடை காலத்திற்கு முன்பாக நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு 2021-ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றால், அடுத்தாண்டு ஒலிம்பிக்கை நடத்துவது மிகவும் கடினம் என ஜப்பான் மருத்துவ சங்க தலைவர் கூறினார். 

இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் குழு தலைவர் யோஷிரோ மோரி அளித்துள்ள பேட்டியில்,

முன்னதாக போர் காரணங்களால் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகியுள்ளன. தற்போது கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போர் புரிந்துக்கொண்டிருக்கிறோம். 

2021-க்குள் கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால், அதன் பிறகு 2022-க்கு போட்டி தள்ளிவைக்கப்படாது. அப்படி நடந்தால் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.

கோபே பல்கலைக்கழக பேராசிரியர் கென்டாரோ இவாடா கூறுகையில், ஒலிம்பிக்கில் உலகம் முழுவதிலுமிருந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள். இந்த கொரோனா வெடிப்பு மீண்டும் தொடர்ந்தால் ஆபத்து அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story