அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வில் நீச்சல் வீரர்களின் பயிற்சிக்கு அனுமதி கிடைக்குமா? - மோனல் சோஷி


அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வில் நீச்சல் வீரர்களின் பயிற்சிக்கு அனுமதி கிடைக்குமா? - மோனல் சோஷி
x
தினத்தந்தி 29 July 2020 12:23 AM GMT (Updated: 29 July 2020 12:23 AM GMT)

அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வில் நீச்சல் வீரர்களின் பயிற்சிக்கு அனுமதி கிடைக்குமா? என்று இந்திய நீச்சல் சம்மேளன பொதுச்செயலாளர் மோனல் சோஷி கேள்வி எழுப்பி உள்ளார்.


இந்திய நீச்சல் சம்மேளன பொதுச்செயலாளர் மோனல் சோஷி அளித்த ஒரு பேட்டியில், ‘அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வின் போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று நம்பப்படும் இந்திய நீச்சல் வீரர்கள் நீச்சல் குளத்தில் பயிற்சியை தொடங்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லையெனில் வெளிநாடு சென்று பயிற்சியை தொடங்குவது குறித்து முடிவு எடுக்க இருக்கிறோம். துபாயில் பயிற்சியை மேற்கொள்ளலாமா? என்ற திட்டம் பரிசீலனையில் இருக்கிறது’ என்று தெரிவித்தார்.


Next Story