உலக கோப்பை வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா தோல்வி


உலக கோப்பை வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா தோல்வி
x
தினத்தந்தி 30 Sep 2021 11:08 PM GMT (Updated: 30 Sep 2021 11:08 PM GMT)

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா தோல்வியை தழுவினார்.

யாங்டான், 

உலக கோப்பை வில்வித்தை இறுதி சுற்று அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான காம்பவுண்ட் ஒற்றையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா 142-146 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவின் பிராடென் ஜலெந்தியனிடம் தோல்வியை தழுவினார்.

பெண்களுக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவின் கால்இறுதியில் இந்திய நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி, ரஷியாவின் ஸ்வெட்லனா கோம்போவாவை நேற்று எதிர்கொண்டார். இதில் இலக்கை நோக்கி துல்லியமாக அம்புகளை எய்த தீபிகா 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். ஆனால் அரைஇறுதியில் தீபிகா 2-6 என்ற செட் கணக்கில் மற்றொரு ரஷிய வீராங்கனை எலினா ஆசிபோவாவிடம் பணிந்தார். தொடர்ந்து சிறிது நேரத்தில் நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்திலும் தோல்வி கண்ட தீபிகா 5-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் மிட்செலி குரோப்பெனிடம் வீழ்ந்தார்.

Next Story