கொரோனா தொற்று எதிரொலி: இந்திய ஓபன் பேட்மிண்டனில் இருந்து இங்கிலாந்து விலகல்


கொரோனா தொற்று எதிரொலி: இந்திய ஓபன் பேட்மிண்டனில் இருந்து இங்கிலாந்து விலகல்
x
தினத்தந்தி 9 Jan 2022 7:55 PM GMT (Updated: 9 Jan 2022 7:55 PM GMT)

வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதின் காரணமாக இந்திய ஓபன் பேட்மிண்டனில் இருந்து இங்கிலாந்து விலகியுள்ளது.

புதுடெல்லி, 

மொத்தம் ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இன்றி நடக்கிறது. 

இந்த ஆண்டின் முதல் சர்வதேச பேட்மிண்டன் தொடரான இதில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கியான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் களம் காண உள்ளனர். 

உலக பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற இந்திய வீரரான சாய் பிரனீத் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதால் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

இதே போட்டியில் பங்கேற்க இருந்த இங்கிலாந்து இரட்டையர் பிரிவு வீரர் சியான் வென்டி மற்றும் அவரது பயிற்சியாளர் நாதன் ராபர்ட்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியினரும் இந்திய ஓபனில் இருந்து விலகியிருப்பதாக இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Next Story