ஆசிய விளையாட்டு போட்டிகள்: கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம் - இந்திய வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு...!


தினத்தந்தி 23 Sep 2023 1:24 AM GMT (Updated: 23 Sep 2023 4:07 PM GMT)

ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா சீனாவின் ஹாங்சோவில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.


Live Updates

  • 23 Sep 2023 4:39 AM GMT

    முதலாவது செட்டில் 13-11 என்ற கணக்கில் தஜிகிஸ்தான் வீரரை இந்திய வீரர் விகாஸ் தக்கர் வீழ்த்தினார்.

  • 23 Sep 2023 4:23 AM GMT

    ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் முதல் நிலை போட்டியில், தஜிகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2- 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

  • 23 Sep 2023 4:12 AM GMT

    பாய்மர படகு போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேசி கணபதி மற்றும் வருண் தாக்கர் ஆகியோர் ரேஸ்-7 போட்டியில் முதல் இடம் பிடித்தனர். இந்திய அணி ஒட்டுமொத்த புள்ளி பட்டியலில் கூடுதலாக ஒரு புள்ளியை பெற்றுள்ளனர்.

  • 23 Sep 2023 4:12 AM GMT

    ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி தொடங்கியது

  • 23 Sep 2023 2:53 AM GMT

    டேபிள் டென்னிஸ்: மகளிர் பிரிவு முதல் நிலை ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தியது இந்தியா. அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

  • 23 Sep 2023 2:43 AM GMT

    டேபிள் டென்னிஸ் போட்டியில் நேபாளம் அணிக்கு எதிராக 2 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

  • 23 Sep 2023 2:39 AM GMT

    டேபிள் டென்னிஸ் பெண்கள் முதல்நிலை போட்டி- 2-ல் 3-வது செட்டையும் 11- 2 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

  • 23 Sep 2023 2:20 AM GMT

    முதல் செட்டை 11 -1 என்ற கணக்கிலும் 2-வது செட்டை 11-6 என்ற கணக்கிலும் 3-வது செட்டை 11-8 என்ற கணக்கிலும் வீழ்த்தினார்.


  • 23 Sep 2023 2:20 AM GMT

    நேபாள் வீராங்கனை சுவல் ஷ்ரேஸ்தா சிக்காவை 3-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை தியா பராக் வீழ்த்தினார்.


  • 23 Sep 2023 2:20 AM GMT

    குரூப் எப் பிரிவின் கீழ் பெண்களுக்கான முதல்நிலை டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் 2 செட்டை கைப்பற்றியது இந்தியா.



Next Story