லைவ்: ஆசிய விளையாட்டு - ஒரே நாளில் 6 தங்கம் வென்று இந்தியா அசத்தல்


தினத்தந்தி 7 Oct 2023 1:09 AM GMT (Updated: 15 Oct 2023 1:01 AM GMT)

ஆசிய விளையாட்டு தொடரின் 15-வது நாளான இன்று மட்டும் இந்தியா 6 தங்க பதக்கங்களை வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு தொடரில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.




Live Updates

  • 7 Oct 2023 4:03 AM GMT

    சாப்ட் டென்னிஸ்:

    சாப்ட் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் காலிறுதி சுற்றில் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் 4-1 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனை ராக ஸ்ரீயை வீழ்த்தி சீன வீராங்கனை யுய் மா அபார வெற்றிபெற்றார். இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை ராக ஸ்ரீ அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

    சாப்ட் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் செகன்ட் ஸ்டேஜ் போட்டி 2ல் இந்தியா - சீன தைபே மோதின. இப்போட்டியில் 4-0 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் அங்கித் சிரங்கை வீழ்த்தி சீன தைபே வீரர் யு சங் அபார வெற்றிபெற்றார். இப்போட்டியில் தோல்வியடைந்த ராக ஸ்ரீ அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

  • 7 Oct 2023 3:51 AM GMT

    மல்யுத்தம்:

    மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 86 கிலோ 1/8 இறுதி சுற்று போட்டி 233ல் இந்தியா - இந்தோனேசியா மோதின. இப்போட்டியில் 11-0 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசிய வீரரை வீழ்த்தி இந்திய வீரர் தீபக் புனியா அபார வெற்றிபெற்றார். இதன் மூலம் மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 86 கிலோ காலிறுதி சுற்றுக்கு தீபக் புனியா முன்னேறினார்.

    மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 74 கிலோ 1/8 இறுதி சுற்று போட்டி 256ல் இந்தியா - கம்போடியா மோதின. இப்போட்டியில் 10-0 என்ற புள்ளி கணக்கில் கம்போடிய வீரரை வீழ்த்தி இந்திய வீரர் யாஷ் அபார வெற்றிபெற்றார். இதன் மூலம் மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 74 கிலோ காலிறுதி சுற்றுக்கு யாஷ் முன்னேறினார். 

  • 7 Oct 2023 3:34 AM GMT

    ஜு-ஜிட்சு:

    ஜு-ஜிட்சு ஆண்கள் 85 கிலோ ரவுண்ட் ஆப் 32 போட்டி 2ல் இந்தியா - தாய்லாந்து மோதின. இப்போட்டியில் 50-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் உமா மகேஷ்வரை வீழ்த்தி தாய்லாந்து வீரர் வெற்றிபெற்றார். இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீரர் மகேஷ்வர் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

    ஜு-ஜிட்சு பெண்கள் 63 கிலோ ரவுண்ட் ஆப் 16 போட்டி 1ல் இந்தியா - மங்கோலியா மோதின. இப்போட்டியில் 50-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை கிரண் குமாரியை வீழ்த்தி மங்கோலிய வீராங்கனை பயர்மா அபார வெற்றிபெற்றார். இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை குமாரி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

    ஜு-ஜிட்சு ஆண்கள் 85 கிலோ ரவுண்ட் ஆப் 32 போட்டி 2ல் இந்தியா - மங்கோலியா மோதின. இப்போட்டியில் 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் அமர்ஜெத் சிங்கை வீழ்த்தி மங்கோலிய வீரர் அல்ட்அங்ரெல் வெற்றிபெற்றார். இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீரர் அமர்ஜெத் சிங் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். 

  • 7 Oct 2023 3:15 AM GMT

    கேனோ ஸ்லாலோம்:

    கேனோ ஸ்லாலோம் ஆண்கள் கயக் அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் ஹிதேஷ் கிவத் 10ம் இடத்தையும், சுபம் கிவத் 11ம் இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியில் முதல் 10 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். அதன் அடிப்படையில் இந்திய வீரர் ஹிதேஷ் கிவத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

  • 7 Oct 2023 2:35 AM GMT

    பதக்க பட்டியல்:-

    ஆசிய விளையாட்டு தொடரில் 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது.

  • 7 Oct 2023 2:34 AM GMT

    கபடி:

    கபடி பெண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா - சீன தைபே மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 26-25 புள்ளி கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியாவுக்கு 100வது பதக்கம் கிடைத்துள்ளது.



  • 7 Oct 2023 2:14 AM GMT

    கபடி:

    கபடி பெண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா - சீன தைபே மோதி வருகின்றன. பரபரப்பாக நடந்து வரும் இப்போட்டியில் தற்போதைய நிலவரப்படி 19-16 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

  • 7 Oct 2023 2:01 AM GMT

    பதக்க பட்டியல்:-

    ஆசிய விளையாட்டு தொடரில் 24 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 99 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது. 

  • 7 Oct 2023 1:59 AM GMT

    வில்வித்தை:-

    வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா - ஓஜஸ் பிரவீன் மோதினர். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 149-147 என்ற புள்ளி கணக்கில் அபிஷேக் வர்மாவை வீழ்த்தி ஓஜஸ் பிரவீன் தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில் தோல்வியடைந்த அபிஷேக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இதன் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

  • 7 Oct 2023 1:52 AM GMT

    கபடி:

    கபடி பெண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா - சீன தைபே மோதி வருகின்றன. பரபரப்பாக நடந்து வரும் இப்போட்டியில் தற்போதைய நிலவரப்படி 14-9 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.


Next Story