ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா...!


தினத்தந்தி 6 Oct 2023 6:32 AM IST (Updated: 6 Oct 2023 7:57 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய விளையாட்டு தொடரில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது.

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

Live Updates

  • 6 Oct 2023 7:22 AM IST

     வங்காளதேச அணி திணறல்

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்களுடன் தடுமாறி வருகிறது. இந்திய அணி கட்டுக்கோப்பாக பந்து வீசி வருவதால் ரன்களை குவிக்க முடியாமல் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.

  • 6 Oct 2023 7:01 AM IST

    வில்வித்தை போட்டியில் இந்திய அணி ஜப்பானை 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. நான்காவது மற்றும் கடைசி செட்டை 56-51 என்ற கணக்கில் வென்றதன் மூலம் இந்தியா 4-வது இடம் பிடித்தது. இதனால், இந்திய அணி அரையிறுதிக்கும் முன்னேறியுள்ளது.

  • 6 Oct 2023 6:35 AM IST

    ஆசிய விளையாட்டு: முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

1 More update

Next Story