டென்னிஸ்

உலக ஆண்கள் டென்னிஸ்: டேனில் மெட்விடேவ் வெற்றி + "||" + World Men's Tennis: Daniil Medvedev wins

உலக ஆண்கள் டென்னிஸ்: டேனில் மெட்விடேவ் வெற்றி

உலக ஆண்கள் டென்னிஸ்: டேனில் மெட்விடேவ் வெற்றி
உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரெட் பிரிவைச் சேர்ந்த டேனில் மெட்விடேவ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் நேற்று மோதினர்.
துரின்,

ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது.

தரவரிசையில் டாப்-8 இடங்களில் இருக்கும் வீரர்கள் 'ரெட்' மற்றும் 'கிரீன்' என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அரைஇறுதிக்கான லீக் ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இந்த ‘ரவுண்ட்-ராபின்’ முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். 

இந்த நிலையில் நேற்று ‘ரெட்’ பிரிவில் நடப்பு சாம்பியனான ரஷிய வீரர் டேனில் மெட்விடேவும் ஜெர்மனியைச் சேர்ந்த 3-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவும் மோதினர். இந்த ஆட்டத்தில் டேனில் மெட்விடேவ் 6-3, 6-7 (3-7), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை வீழ்த்தி வெற்றியை தனதாக்கினார்.