உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: அரைஇறுதியில் ஜோகோவிச் தோல்வி


உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: அரைஇறுதியில் ஜோகோவிச் தோல்வி
x
தினத்தந்தி 22 Nov 2021 5:31 AM IST (Updated: 22 Nov 2021 5:31 AM IST)
t-max-icont-min-icon

உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் அரைஇறுதி போட்டியில் ஜெர்மனி வீரரிடம் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

துரின்,

ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), ஒலிம்பிக் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி) மல்லுகட்டினர். 

2 மணி 29 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஸ்வெரேவ் 7-6 (7-4), 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் கவுரவமிக்க இந்த பட்டத்தை 6-வது முறையாக வென்று ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்ய காத்திருந்த ஜோகோவிச்சின் கனவுக்கு முட்டுக்கட்டை விழுந்தது.
1 More update

Next Story