உலக இறுதிச்சுற்று பேட்மிண்டன்:ஸ்ரீகாந்த் வெற்றி!


உலக இறுதிச்சுற்று பேட்மிண்டன்:ஸ்ரீகாந்த் வெற்றி!
x
தினத்தந்தி 1 Dec 2021 2:27 PM IST (Updated: 1 Dec 2021 2:27 PM IST)
t-max-icont-min-icon

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் பிரான்ஸ் நாட்டின் தோமாவை வீழ்த்தினார்.

பாலி,

ஆண்டு இறுதியில் அரங்கேறும் கவுரவமிக்க உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் இன்று  முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது.

மொத்தம் ரூ.11¼ கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் உலக தரவவரிசையில் ‘டாப்-8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கிறார். 

ஸ்ரீகாந்த் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தோமா ஜூனியர் போபோவை (பிரான்ஸ்) 21-14, 21-16 எனும் செட் கணக்கில் வீழ்த்தினார். அவர் அடுத்த ஆட்டத்தில் குன்லாவுத் விதித்சரனை(தாய்லாந்து)  எதிர்கொள்ள உள்ளார். 

மறுமுனையில், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை ஜப்பானின் நமி மட்சுயாமா - சிஹாரு ஷிதா ஜோடியிடம் 14-21, 18-21 எனும் செட் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
1 More update

Next Story