ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆதரவு வக்கீல்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஆதரவு வக்கீல்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவான வக்கீல்கள் மணிகண்ட ராஜா, நாகராஜா, கருப்பசாமி, ஜி. மணிகண்டன், கர்ணன், அஜிமா ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தூத்துக்குடி நகரம் வளர்ச்சி அடைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கிடைத்தால் அவர்கள் தேவையற்ற குற்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். எனவே ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story