ஏ.டி.பி. இறுதி சுற்று : ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி


ஏ.டி.பி. இறுதி சுற்று : ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 14 Nov 2022 3:08 AM GMT (Updated: 14 Nov 2022 4:24 AM GMT)

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் ஸ்பெனின் நபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

துரின்,

உலக தரவரிசையில் 'டாப்-8' இடம் வகிக்கும் வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று தொடங்கியது.

இதில் நடைபெற்ற முதல் போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்காவின் இளம் வீரரும், தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் டெய்லர் ப்ரிட்சை சந்தித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 7-6, 6-1 என்ற செட் கணக்கில் டெய்லர் ப்ரிட்சிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இதே போல் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 7-6 (7-4) 6-4 என்ற செட் கணக்கில் கனடாவின் 7-வது நிலை வீரரான பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமை வீழ்த்தினார்.


Next Story