ஆஸி. ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்...!

Image Courtesy: Twitter
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா இணை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மெல்போர்ன்,
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி தொடங்கி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னனி வீராங்கனை சானியா மிர்ஸாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்த இணை கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டெசிரே க்ராவ்சிக் மற்றும் நீல் ஸ்குப்ஸ்கி இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1 மணி 52 நிமிடங்கள் நீடித்தது.
இறுதியாக டெசிரே க்ராவ்சிக் மற்றும் நீல் ஸ்குப்ஸ்கி இணையை சானியா மிர்ஸா, ரோகன் போபண்ணா ஜோடி 7-6(5), 6-7(5), 10-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிபோட்டி 28ம் தேதி நடைபெறுகிறது.
Related Tags :
Next Story