ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: ஜாக் டிராபரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார் ரபெல் நடால்...!


ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: ஜாக் டிராபரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார் ரபெல் நடால்...!
x

Image Courtesy: AFP 

ஜாக் டிராபர்-ரபெல் நடாலுக்கு இடயிலான ஆட்டம் 3 1/2 மணி நேரம் நீடித்தது.

மெல்போர்ன்,

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்று 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான 111-வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்கியது.வருகிற 29-ந்தேதி வரை நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி போடாத விவகாரத்தால் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாமல் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), இந்த சீசனில் விளையாட உள்ளார்.

அவர் கோப்பையை வெல்லும் பட்சத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரபெல் நடாலை (22 கிராண்ட்ஸ்லாம்) சமன் செய்து விடுவார். நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தனது முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஜாக் டிராபரை இன்று சந்தித்தார்.

ரபேல் நடாலுக்கு கடுமையான போட்டி கொடுத்தார் ஜாக் டிராபர். சுமார் 3 1/2 மணி நேரம் நீடித்த இந்த மோதலில் ரபெல் நடால் 7-5, 2-6, 6-4, 6-1 என்ற புள்ளி வித்தியாசத்தில் போராடி வெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.


Next Story