ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அஸரென்கா அரைஇறுதிக்கு தகுதி

image tweeted by @AustralianOpen
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரைபகினா, அஸரென்கா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மெல்போர்ன்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டங்களில் விம்பிள்டன் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் ஆஸ்டாபென்கோவையும் (லாத்வியா), முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரம் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-4, 6-1 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜெசிகா பெகுலாவையும் (அமெரிக்கா) பதம் பார்த்து அரைஇறுதிக்கு முன்னேறினர்.
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடியை எதிர்த்து ஆட இருந்த ஆஸ்டாபென்கோ (லாத்வியா) வெகா ஹெர்னாண்டஸ் (ஸ்பெயின்) ஆகியோர் திடீரென ஒதுங்கியதால் களம் இறங்காமலேயே சானியா- போபண்ணா இணை அரைஇறுதியை உறுதி செய்தது.
Related Tags :
Next Story