ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; போபண்ணா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; போபண்ணா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

Image Tweet : @AITA__Tennis

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி அர்ஜெண்டினா இணையான மாக்சிமோ கோன்சாலஸ் - ஆண்ட்ரேஸ் மோல்டெனி உடன் மோதியது.

இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய போபண்ணா இணை 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் மாக்சிமோ கோன்சாலஸ் - ஆண்ட்ரேஸ் மோல்டெனி இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.


Next Story