ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : போபண்ணா ஜோடி சாம்பியன்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : போபண்ணா ஜோடி சாம்பியன்
x

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - இத்தாலி நாட்டை சேர்ந்த பொலேல்லி , வவஸ்ஸோரி ஜோடியுடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய போபண்ணா ஜோடி , 7-6 (7-0) , 7-5 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.


Next Story
  • chat