ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் அதிர்ச்சி தோல்வி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் அதிர்ச்சி தோல்வி
x

Image Courtesy: @AustralianOpen

தினத்தந்தி 20 Jan 2024 11:14 AM GMT (Updated: 20 Jan 2024 11:14 AM GMT)

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் பல்கேரியாவை சேர்ந்த முன்னணி வீரரான கிரிகோர் டிமிட்ரோவ் போர்ச்சுகல்லின் நுனோ போர்ஹெஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (7-3) என போராடி கைப்பற்றிய டிமிட்ரோவ் அடுத்த மூன்று செட்களில் 4-6, 2-6, 6-7 (6-8) என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார். இந்த வெற்றியின் மூலம் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ள நுனோ போர்ஹெஸ் அந்த சுற்றில் ரஷிய வீரர் டேனியல் மெத்வதேவை எதிர்கொள்ள உள்ளார்.


Next Story