ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; கார்லஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; கார்லஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy: AFP

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ் செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிக்கை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 6-4, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் மியோமிர் கெக்மனோவிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அல்காரஸ் காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொள்கிறார்.


Next Story