ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் கார்லஸ் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் கார்லஸ் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி
x

Image Courtesy: @AlexZverev / @carlosalcaraz / @AustralianOpen

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் ஜெர்மனியின் அலெக்ஸ்சாண்டர் ஸ்வெரவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் கார்லஸ் அல்காரஸ் 1-6, 3-6, 7-6 (7-2), 4-6 என்ற செட் கணக்கில் அலெக்ஸ்சாண்டர் ஸ்வெரவுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.


Next Story