ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy: @DjokerNole / @AustralianOpen

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் பிரான்சின் அட்ரியன் மன்னாரினோவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-0, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் அட்ரியன் மன்னாரினோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை எதிர்கொள்கிறார்.


Next Story