ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி..!


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி..!
x

image courtesy; twitter/ @AustralianOpen

மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஆண்டி ரூபலேவ், சின்னர் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மெல்போர்ன்,

டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

தொடக்க நாளான இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), தகுதி போட்டியின் மூலம் முதல் சுற்றை எட்டிய டினோ பிரைஸ்மிக்கை (குரோஷியா) உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் நேர் செட் கணக்கிலேயே வெற்றி பெற்றுவிடுவார் என அனைவரும் நினைத்தனர்.

ஆனால் முதல் செட்டை கைப்பற்றிய ஜோகோவிச்சிற்கு, 2-வது செட்டை கைப்பற்றி டினோ பிரைஸ்மிக் அதிர்ச்சி அளித்தார். பின்னர் சுதாரித்து விளையாடிய ஜோகோவிச் அடுத்த இரு செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-2, 6-7, 6-3 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஆண்டி ரூபலேவ், சின்னர் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.


Next Story