ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy: AFP

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 7-6 (7-3), 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.


Next Story