ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சபலென்கா, லினெட் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சபலென்கா, லினெட் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

image courtesy: #AusOpen twitter

நாளை நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் அரினா சபலென்கா, மேக்டா லினெட் இருவரும் மோத உள்ளனர்.

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 16-ம் தேதி தொடங்கி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, குரோஷியா வீராங்கனை டோனா வெகிக்குடன் மோதினார். இந்த போட்டியில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டோனாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா, போலந்து வீராங்கனை மேக்டா லினெட்டுடன் மோதினார். இந்த போட்டியில் லினெட் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கரோலினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

நாளை நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் அரினா சபலென்கா, மேக்டா லினெட் இருவரும் மோத உள்ளனர்.

Next Story