ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சபலென்கா வெற்றி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சபலென்கா வெற்றி
x

அரினா சபலென்கா (image courtesy: #AusOpen twitter)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நேற்று தொடங்கியது.

மெல்போர்ன்,

டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ள இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

தொடக்க நாளான நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 2 வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), ஜெர்மன் வீராங்கனை எல்லா சீடலுடன் மோதினார். இந்த போட்டியில் சபலென்கா 6-0, 6-1 என்ற செட் கணக்கில் எல்லாவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, ஜப்பான் வீராங்கனை நாவோ ஹிபினோவை எதிர் கொண்டார். இந்த போட்டியில் மரியா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஹிபினோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.


Next Story