ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
x
தினத்தந்தி 27 Jan 2024 10:41 AM GMT (Updated: 27 Jan 2024 12:50 PM GMT)

இன்று நடந்த இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சீனாவின் குயின்வென் ஜெங்குடன் மோதினார்.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, நாளையுடன் முடிவடைகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சீனாவின் குயின்வென் ஜெங்குடன் மோதினார்.

இதில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இது சபலென்காவின் 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.


Next Story