பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர்; எலெனா ரைபகினா அரையிறுதிக்கு முன்னேற்றம்..!


பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர்; எலெனா ரைபகினா அரையிறுதிக்கு முன்னேற்றம்..!
x

image courtesy; AFP

இதில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் விக்டோரியா அசரென்கா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பிரிஸ்பேன்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் காலிறுதி சுற்று நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா, ரஷியாவை சேர்ந்த அனஸ்தேசியா பொட்டாபோவா உடன் மோதினார். இதில் முதல் செட்டை ரைபாகினா கைப்பற்றிய நிலையில் பொட்டாபோவா காயத்தால் போட்டியை தொடர முடியவில்லை. எனவே இந்த ஆட்டம் முதல் செட்டிலேயே முடிவடைந்து ரைபாகினா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் அரையிறுதியில் செக் நாட்டை சேர்ந்த லிண்டாநோஸ்கோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

இதில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் நாட்டை சேர்ந்த விக்டோரியா அசரென்கா, லாட்விய வீராங்கனை ஜெசினா ஒஸ்டாபென்கோ உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அசரென்கா 6-3, 3-6 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


Next Story