கனடா ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் சாம்பியன்..!

image courtesy: National Bank Open twitter
கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றார்.
டொரோன்டோ,
கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ருமேனியாவின் வீராங்கனை சிமோனா ஹாலெப் பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாத் மையாவுடன் மோதினார்.
இந்த போட்டியில் சிமோனா ஹாலெப் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 6-2 என மையா கைப்பற்றினார். இதையடுத்து நடந்த வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ஹாலெப் 6-3 என கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் மையாவை வீழ்த்தி பெண்கள் ஒற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை சிமோன ஹாலெப் வென்றார்.
Related Tags :
Next Story






