கனடா ஓபன் டென்னிஸ்; ஸ்வரெவ், சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி


கனடா ஓபன் டென்னிஸ்; ஸ்வரெவ், சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி
x

image courtesy; AFP

தினத்தந்தி 11 Aug 2023 6:57 AM GMT (Updated: 11 Aug 2023 7:00 AM GMT)

கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டி நடைபெறுகிறது.

மாண்ட்ரியல்,

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 5-ம் தேதி தொடங்கி வரும் 13-ம் தேதி முடிவடைய உள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் டென்னிஸ் தரவரிசையில் 13-ம் நிலை வீரரான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரெவ், ஸ்பெயின் வீரர் புகினோ உடன் மோதினார். இதில் புகினோ 6-1, 6-2 என்ற நேர் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், டென்னிஸ் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் மான்பில்சுடன் மோதினார். இதில் மான்பில்ஸ் 6-4, 6-3 என்ற நேர் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார். முன்னணி வீரரான சிட்சிபாஸ் 2- வது சுற்றுடன் வெளியேறினார்.


Next Story