பியூனஸ் அயர்ஸ் டென்னிஸ்.. அரையிறுதிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன்


பியூனஸ் அயர்ஸ் டென்னிஸ்.. அரையிறுதிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன்
x

கார்லஸ் அல்காரஸ்

தினத்தந்தி 17 Feb 2024 6:06 AM GMT (Updated: 17 Feb 2024 7:24 AM GMT)

நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் சிலியின் மூன்றாம் தரநிலை வீரரான நிக்கோலஸ் ஜாரியை அல்காரஸ் எதிர்கொள்கிறார்.

பியூனஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டித்தொடர் நடைபெறுகிறது. களிமண் ஆடுகளத்தில் நடைபெறும் இத்தொடரில் நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) அரையிறுதிக்கு முன்னேறினார்.

உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள அல்காரஸ், பியூனஸ் அயர்ஸ் காலிறுதி ஆட்டத்தில் இத்தாலிய வீரர் ஆண்ட்ரியா வவாசோரியை 7-6 (7/1), 6-1 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.

நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் சிலியின் மூன்றாம் தரநிலை வீரரான நிக்கோலஸ் ஜாரியை அல்காரஸ் எதிர்கொள்கிறார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் பகுண்டோ டயாஸ், பெடரிகோ கோரியா ஆகியோர் மோதுகின்றனர்.


Next Story