கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை


கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை
x
தினத்தந்தி 23 Sept 2023 11:28 PM IST (Updated: 23 Sept 2023 11:59 PM IST)
t-max-icont-min-icon
திருப்பூர்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியுள்ளது. திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை நேற்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

கைத்தறி உதவி இயக்குனர் கார்த்திகேயன், முதுநிலை மண்டல மேலாளர் நந்தகோபால், அரசு திட்ட மேலாளர் அன்பழகன், உற்பத்தி மேலாளர் கஜேந்திரன், புதிய விற்பனை நிலைய மேலாளர் பிரபு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு மற்றும் பருத்தி சேலைகள், இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், திரைசீலைகள், ரெடிமேட் சட்டைகள், சுடிதார் ரகங்கள், குர்தீஸ் வகைகள், பலதரப்பட்ட பைகள், குல்ட் ரகங்கள் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட கோ- ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்துக்கு ரூ.1½ கோடிவிற்பனை இலக்காகவும், உடுமலை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு ரூ.50 லட்சம் விற்பனை இலக்கும் என மாவட்டத்துக்கு ரூ.2 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Next Story