சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிப்பு..!


சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிப்பு..!
x

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் முதலிடத்தில் இருக்கிறார்.

நியூயார்க்,

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி ஒற்றையர் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) முதலிடத்திலும், கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 2-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிசில் மகுடம் சூடிய ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 6-வது இடத்தில் தொடருகிறார். இ

ந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் தோற்ற ஹோல்ஜர் ருனே (டென்மார்க்) இரு இடம் உயர்ந்து தனது சிறந்த தரநிலையாக 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சிட்சிபாஸ் (கிரீஸ்) இரு இடம் சரிந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் டாப்-10 இடத்திற்குள் மாற்றமில்லை. போலந்தின் இகா ஸ்வியாடெக் 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கிறார்.


Next Story