துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் டாலன் கிரீக்ஸ்பூர் - ஜான் லெனார்ட்ஸ்ட்ரப் இணை சாம்பியன்

Image Courtesy: @DDFTennis
இந்த தொடரின் கடைசி நாளான நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.
துபாய்,
துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரின் கடைசி நாளான நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாலன் கிரீக்ஸ்பூர் - ஜான் லெனார்ட்ஸ்ட்ரப் இணை ஆஸ்டின் கிராஜிசெக் - இவன்டோடிக் இணையை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 4-6, 10-6 என்ற செட் கணக்கில் ஆஸ்டின் கிராஜிசெக் - இவன்டோடிக் இணையை வீழ்த்தி டாலன் கிரீக்ஸ்பூர் - ஜான் லெனார்ட்ஸ்ட்ரப் இணை சாம்பியன் பட்டத்தை வென்றது.
Related Tags :
Next Story






