டென்னிஸ் விளையாட்டை விட்டு விலக நினைத்தீர்களா ? - பிரபல வீராங்கனை எம்மா ராடுகானு பதில்


டென்னிஸ் விளையாட்டை விட்டு விலக நினைத்தீர்களா ? - பிரபல வீராங்கனை எம்மா ராடுகானு பதில்
x

Image Courtesy : AFP

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று பிரபலமானவர் எம்மா ராடுகானு.

லண்டன்,

மிக இளம் வயதில் டென்னிஸ் அரங்கின் முக்கிய நட்சத்திரமாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எம்மா ராடுகானு மாறி இருக்கிறார். 19 வயதே ஆன எம்மா ரடுகானு கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று பிரபலமானவர். மேலும் உலகின் உயரிய விளையாட்டு விருதுகளில் ஒன்றான லாரஸ் விருதை இந்த ஆண்டு எம்மா ரடுகானு வென்றார்.

இந்த நிலையில் டென்னிஸ் விளையாட்டை விட்டு விலக நினைத்தீர்களா என்ற கேள்விக்கு அவர் தற்போது பதில் அளித்துள்ளார். இது குறித்து எம்மா ராடுகானு பேசியதாவது :

நிச்சயமாக நினைத்தேன். நான் பொய் சொல்லப் போவதில்லை. கொரோனா தொற்று நோய்களின் போது மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் அப்போது சூழ்நிலைகள் மிகவும் சவாலானவை. என்னால் பயிற்சி செய்ய முடியவில்லை. நான் எட்டு மாதங்கள் பயிற்சி பெறவில்லை.

ஆனால் அதன் மூலம் நான் வலுவாக இருக்க முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் சில சமயங்களில் நீங்கள் அப்படி நினைக்கலாம். அதே நேரத்தில் அது போன்ற சமயங்களில் நீங்கள் உண்மையிலேயே சோர்வாக உணர்ந்தால் , அடுத்து ஏதாவது நல்லது நடக்கும் என்று நீங்கள் ஆறுதல் அடைய வேண்டும். ஏனென்றால் மோசமான சூழ்நிலைகள் எப்போதும் நிலைக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story