பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக், ரூனே, ரூட் காலிறுதிக்கு முன்னேற்றம்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக், ரூனே, ரூட் காலிறுதிக்கு முன்னேற்றம்
x

Iga Swiatek, Lesia Tsurenko (image courtesy: Roland-Garros twitter)

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), உக்ரைன் வீராங்கனை லெசியாவுடன் மோதினார். முதல் செட்டில் இகா ஸ்வியாடெக் 5-1 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சுவாசப் பிரச்சனை காரணமாக லெசியா போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு நான்காவது சுற்று ஆட்டம் ஒன்றில் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர், அமெரிக்கா வீராங்கனை பெர்னார்டா பெராவுடன் மோதினார். இதில் ஜபீர் 6-3, 6-1 என்ற நேர் செட்டில் பெர்னார்டாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காஃப், ஸ்லோவோகியாவின் அன்னா கரோலினாவுடன் மோதினார். இந்த போட்டியில் காஃப் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டம் ஒன்றில் நார்வேயைச் சேர்ந்த காஸ்பர் ரூட், சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் மோதினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் 7-6 (7-3), 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஜாரியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, அர்ஜென்டினா வீரர் பிரான்சிஸ்கோவுடன் மோதினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இருவரும் தலா 2 செட்களை கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை ரூனே 7-6 (10-7) என்ற கணக்கில் வென்று, காலிறுதிக்கு முன்னேறினார்.


Next Story