பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; போபண்ணா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; போபண்ணா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

twitter image via ANI

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லே - ஜோரன் விலீஜென் இணையுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட போபண்ணா இணை 7-6 (7-3), 5-7, 6-1 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் சாண்டர் கில்லே - ஜோரன் விலீஜென் இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

1 More update

Next Story