பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்
x

Image Courtesy: AFP

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அனஸ்தேசியா பொட்டாபோவாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் அனஸ்தேசியா பொட்டாபோவாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

1 More update

Next Story