பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி: ரஷிய வீரர் மெட்விடேவ் தோல்வி


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி: ரஷிய வீரர் மெட்விடேவ் தோல்வி
x

பிரேசிலைச் சேர்ந்த 172-ம் நிலை வீரர் தியாகோ செய்போத் வைல்டு, ரஷிய வீரர் மெட்விடேவை வீழ்த்தினார்.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்றும் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று நடந்தன. ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ரஷியாவின் டேனில் மெட்விடேவ், தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டிய 172-ம் நிலை வீரர் தியாகோ செய்போத் வைல்டுவை (பிரேசில்) எதிர்கொண்டார்.

4 மணி 15 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் செய்போத் வைல்டு 7-6 (7-5), 6-7 (6-8), 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மெட்விடேவுக்கு அதிர்ச்சி அளித்தார். கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள வீரர்களில் ஒருவராக கணிக்கப்பட்டிருந்த மெட்விடேவ் பிரெஞ்சு ஓபனில் முதல் சுற்றுடன் நடையை கட்டுவது இது 5-வது முறையாகும்.

மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6 (8-6), 7-6 (7-0), 6-1 என்ற நேர் செட்டில் தென்ஆப்பிரிக்காவின் லாயிட் ஹாரிசை தோற்கடித்தார். கேஸ்பர் ரூட் (நார்வே), நிஷியோகா (ஜப்பான்), ஆன்ட்ரியா வவாசோரி (இத்தாலி) ஆகியோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.


Next Story