பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு தகுதி


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு தகுதி
x

பிரெஞ்சு ஓபன் டென்னிசில் அல்காரஸ் 5-வது ஆண்டாக 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் நேற்றிரவு ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-1, 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் தாரோ டேனியலை வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். 5-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் கார்பாலேஸ் பானாவை (ஸ்பெயின்) வீழ்த்தி தொடர்ந்து 5-வது ஆண்டாக 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் தனாசி கோக்கினாகிஸ் 3-6, 7-5, 6-3, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்காவை (சுவிட்சர்லாந்து) வெளியேற்றினார். இந்த வெற்றியை வசப்படுத்த கோக்கினாகிசுக்கு 4 மணி 38 நிமிடங்கள் தேவைப்பட்டது. தரவரிசையில் 108-வது இடத்தில் உள்ள கோக்கினாகிஸ் பிரெஞ்சு ஓபனில் 2-வது முறையாக 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா), லோரென்ேஜா சோனிகோ, பாபியோ போக்னினி (இத்தாலி), செபாஸ்டியன் அப்னெர் (ஆஸ்திரியா), ஷபோவலோவ் (கனடா), ஆகியோரும் 2-வது தடையை கடந்தனர்.


Next Story