பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 'டபுள் பாகல்ஸ்' செட்டில் வெற்றி பெற்ற ஸ்வியாடெக்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: டபுள் பாகல்ஸ் செட்டில் வெற்றி பெற்ற ஸ்வியாடெக்
x

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் எதிராளிக்கு ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்கவில்லை.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து), தரவரிசையில் 80-வது இடத்தில் உள்ள வாங் ஸின்யுடன் (சீனா) மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் எதிராளிக்கு ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்கவில்லை.

'டபுள் பாகல்ஸ்' என்று சொல்லப்படும் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் 51 நிமிடங்களில் மெகா வெற்றியை ருசித்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் இரு செட்டிலும் எதிராளிக்கு ஒரு கேம் கூட வழங்காமல் 'டபுள்பாகல்ஸ்' புள்ளியில் ஸ்வியாடெக் முடித்த முதல் ஆட்டம் இது தான். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காகவின் கோகோ காப் 6-7 (5-7), 6-1, 6-1 என்ற செட் கணக்கில் 16 வயதான மிரா ஆன்ட்ரீவாவின் (ரஷியா) சவாலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


Next Story