ஹாலே ஓபன் டென்னிஸ் : டேனியல் மெட்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஹர்காக்ஸ்

Image Courtesy : Hubert Hurkacz Twitter
இறுதிப்போட்டியில் டேனில் மெத்வதேவ், ஹூபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.
ஹாலே,
ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள ஹாலேயில் ஆண்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், போலந்தைச் சேர்ந்த வீரர் ஹூபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஹர்காக்ஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





