டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றால் இவ்வளவு கோடி பரிசா? - மலைக்க வைக்கும் தொகை


டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றால் இவ்வளவு கோடி பரிசா? - மலைக்க வைக்கும் தொகை
x

கோப்புப்படம் 

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் 478 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், வருகிற 29ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கான மொத்த பரிசுத் தொகையாக 60 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 478 கோடி ரூபாய் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவர்களுக்கு சுமார் 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.


Next Story