நடப்பு ஆண்டின் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக இகா ஸ்வியாடெக் தேர்வு!

image courtesy; AFP
டென்னிஸ் இரட்டையர் பிரிவில் நடப்பு ஆண்டின் சிறந்த ஜோடியாக ஸ்டார்ம் ஹண்டர் - எலிஸ் மெர்டென்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வார்சா,
சர்வதேச பெண்கள் டென்னிஸ் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அதன்படி பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீராங்கனையாக இருக்கும் போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் நடப்பு ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டில் பிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட 6 பட்டங்களை வென்றுள்ளார். ஸ்வியாடெக் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த விருதை பெறுகிறார். இதன் மூலம் செரீனா வில்லியம்சுக்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டு முறை அந்த விருதைப் பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை ஸ்வியாடெக் பெற்றுள்ளார்.
டென்னிஸ் இரட்டையர் பிரிவில் நடப்பு ஆண்டின் சிறந்த ஜோடியாக ஸ்டார்ம் ஹண்டர் - எலிஸ் மெர்டென்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story






