இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்; போராடி வெற்றி பெற்ற ஜோகோவிச்


இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்; போராடி வெற்றி பெற்ற ஜோகோவிச்
x

2019-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு ஜோகோவிச் திரும்பியுள்ளார்.

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் வுகிச் ஆகியோர் விளையாடினர்.

2 மணிநேரம் மற்றும் 10 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில், முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் வென்றார். எனினும், 2-வது செட்டை அலெக்சாண்டர் 5-7 என்ற கணக்கில் வென்றார். இதனால், 3-வது செட்டை கைப்பற்றும் போட்டி பரபரப்பாக நடந்தது.

இதில், 6-3 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி ஜோகோவிச் போட்டியில் வெற்றி பெற்றார். கடந்த ஜனவரியில், ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதி போட்டியில் ஜான்னிக் சின்னரிடம் தோல்வியடைந்த பின்னர் முதன்முறையாக ஜோகோவிச் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

2019-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு ஜோகோவிச் திரும்பியுள்ளார். இதுபற்றி ஜோகோவிச் கூறும்போது, ஒரு தொழில்முறை வீரர் என்ற வகையில், 5 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம்.

ஆனால், 2019-ல் இந்தியன் வெல்ஸில் கடைசியாக டென்னிஸ் விளையாடியது, என்னவோ நேற்று நடந்தது போல் உள்ளது என அவர் கூறுகிறார். இது அவருடைய 400-வது வெற்றியாகும். அடுத்து இத்தாலியின் லூக்கா நார்டியை எதிர்த்து ஜோகோவிச் விளையாட உள்ளார்.


Next Story