இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் கால்இறுதி சுற்றுக்கு தகுதி


இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் கால்இறுதி சுற்றுக்கு தகுதி
x

குரோஷியா வீராங்கனையை வீழ்த்தி போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் கால்இறுதிக்குள் நுழைந்தார்.

ரோம்,

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் டோனா வெகிச்சை (குரோஷியா) வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

அதே போல் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் கேமரூன் நோரியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story