இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: ரூனேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் மெட்வெடேவ்...!


இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: ரூனேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் மெட்வெடேவ்...!
x

Image Courtesy: @WeAreTennisITA

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஹ்யூகோ நிஸ் - ஜான் சிலின்ஸ்கி இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ரோம்,

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலீனா ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதையடுத்து ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஹோல்கர் ரூனே, டேனியல் மெட்வெடேவ் ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் டேனியல் மெட்வெடேவ் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஹோல்கர் ரூனேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போடிக்வாண்டே-ராபின் ஹாஸ் இணை ஹ்யூகோ நிஸ் - ஜான் சிலின்ஸ்கி இணையை எதிர் கொண்டது. இந்த ஆட்டத்தில் ஹ்யூகோ நிஸ் - ஜான் சிலின்ஸ்கி இணை 7-5, 6-1 என்ற செட் கணக்கில் போடிக்வாண்டே-ராபின் ஹாஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

மேலும், பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா - கோகோ காப் இணை எலிஸ் மெர்டென்ஸ் - ஸ்ட்ரோம் சாண்டர்ஸ் இணையை எதிர்கொண்டது. இதில் எலிஸ் மெர்டென்ஸ் - ஸ்ட்ரோம் சாண்டர்ஸ் இணை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலா - கோகோ காப் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.Next Story